• Mar 12 2025

‘ஜனநாயகன்’ படத்தில் நடிக்கவிருக்கும் இயக்குநர்கள்.....படக்குழு வெளியிட்ட மாஸான அப்டேட்!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தளபதி விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தில் முக்கிய நபர்கள் பலர் சிறிய கேரக்டர்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் முன்னணி இயக்குநர் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

சினிமா வட்டாரங்களில் பரவும் தகவலின்படி, அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் இப்படத்தில் பத்திரிக்கை நிருபர்களாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளனர். அவர்கள் முக்கியமான அரசியல் பின்னணியைக் கொண்ட ‘ஜனநாயகன்’ படத்தில் விஜயுடன் சேர்ந்து சமூக உணர்வுப்பூர்வமான முக்கியமான காட்சிகளில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது


தளபதி விஜய் இனிமேல் அரசியலில் முழுமையாக ஈடுபடலாம் என்ற நிலைமை உருவாகி வரும் நிலையில் ‘ஜனநாயகன்’ படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், இப்படத்தில் அட்லி, லோகேஷ், நெல்சன் ஆகியோர் இணைகிறார்கள் என்ற தகவல் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விஜயின் நடிப்பில் அண்மையில் வெளியாகிய மாஸ்டர், லியோ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மூன்று முக்கிய இயக்குநர்களும் தற்போது விஜயுடன் இணைந்து சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement