தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதுவரை ஹீரோவாக மட்டும் நடித்தவர் தற்போது ஏனைய முன்னணி நடிகர்களை வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஊக்குவித்து வருகிறார். அவரின் அசுர வளர்ச்சியால், முன்னணி நடிகர்கள் பலரும் அவரது படத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ காணப்படுகிறது. இதில் ஜெயம் ரவி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
சுதா கொங்கரா எப்போதும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்குநர். அவரின் ‘சூரரை போற்று’ படத்தில் கதையின் முக்கியத்துவம் மட்டுமே அனைவராலும் பேசப்பட்டது. தற்பொழுது நடிகர் அருண் விஜய் மற்றும் ஆர்யா வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இரண்டு நடிகர்களும் இதுவரை சினிமாவில் ஹீரோக்களாகவே நடித்தவர்கள். ஆனால், தற்போது தமிழ் சினிமாவின் மாறுபட்ட கதைக்களத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கின்றனர். இதுவரை ஹீரோக்களாகவே தோன்றியவர்கள் தற்பொழுது வில்லன் கதாபாத்திரங்களை ஏற்க தொடங்கியிருப்பது சினிமாவுக்கு புதிய பரிணாம வளர்ச்சி என்றே கூறலாம்.
Listen News!