வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி, நீர்ப்பறவை, ராட்சசன், முண்டாசுப்பட்டி, கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் விஷ்ணு விஷால். இவர் இறுதியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்தார்.
இதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் ஆர்யன். இந்த படத்தை அறிமுக இயக்குநரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 31-ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ஆர்யன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் சீரியல் க்ரைம் த்ரில்லர் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இது ராட்சசன் 2 ஆக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. தற்போது ஆர்யன் பட டீசர் பலரின் கவனம் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!