தமிழக அரசியலில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம், தளபதி விஜய் தலைமையிலான த.வெ.க பொதுக்கூட்ட நிகழ்வில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து வந்த அரசியல் பின்னணிகள் காணப்படுகின்றன.
அண்மையில் கரூரில் நடைபெற்ற த.வெ.க பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததுமே இந்த விவகாரத்திற்கு மூல காரணமாகும். இந்த நிகழ்வின் பின்னணியில், விஜய் எந்த வகையிலும் sorry சொல்லவில்லையென்றும், அவரது செயல்பாடுகள் மிகவும் பாசாங்கானவை என்றும், தற்போது கரு பழனியப்பன் எழுப்பியுள்ள கடுமையான விமர்சனங்கள் தமிழக அரசியல் மையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
எந்த விதமான மறைமுகமுமின்றி, கரு பழனியப்பன் தன் கருத்துகளை கூர்மையுடன் இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், "கூட்டத்தில எவன் எக்கேடு கெட்டா என்ன, நான் வந்து பேசிட்டு போயிடுவேன். 41 பேருக்கு வெளிவராதவன் அவங்க கட்சிய சேர்ந்த 4பேர புடிச்சதும் 4நாள் கழிச்சு.. என்ன என்னவென்னா செய்யுங்கன்னு சினிமா டைலாக் பேசுறான்.. மன்னிப்பு கேட்கவே அவன் தயாராக இல்ல.." என்றார்.
அதுமட்டுமல்லாது, இவன்லாம் ஒரு தலைவனா.? தலைவனும் முட்டாளா இருக்கான்... தொண்டன் அடி முட்டாளா இருக்கான்... இவ்ளோ பிரச்சனை நடுவில stanwithvijayனு போடுறான். முதலமைச்சர் அவ்ளோ பண்பா பேசுறார்... நீ மறுபடியும் தூண்டி விடுற மாதிரி பேசுற.. அரசியலில் விஜய் மாதிரி ஒரு அயோக்கியன் கிடையாது..! " எனவும் தெரிவித்துள்ளார் கரு பழனியப்பன்.
Listen News!