கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்த விஜய், தனது இறுதிப் படமான ஜனநாயகன் படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அவருடைய சம்பளம் சுமார் 225 கோடிகளாகவும் அதிகரிக்கப்பட்டது.
ஜனநாயகன் படத்தை எச். வினோத் இயக்கினார். இந்த படத்தை கர்நாடக திரையுலகை சேர்ந்த கே. பி. என் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் எதிர்வரும் பொங்கல் தினத்தன்று ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஏற்கனவே ஜனநாயகன் படம் அக்டோபர் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அதன் பின் அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ் செய்தால் அது அரசியல் ரீதியாகவும் கைகொடுக்கும் என்ற காரணத்தினால் படத்தின் ரிலீஸை பொங்கலுக்கு மாற்றினர் .
ஜனநாயகன் படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ என்பன விஜயின் அரசியல் பயணத்தை உறுதியாகக் குறிக்கின்றது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் மலேசியாவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது விஜய்க்கு பிரச்சனை நடந்து கொண்டு இருப்பதால் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடாத்த திட்டமிட்டுள்ளனர்.
டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த விழாவை மலேசியாவில் கபாலி படத்தை வெளியிட்ட கபாலி மாலிக் என்பவர் ஒருங்கிணைக்க இருக்கின்றார். இந்த விழாவில் 40 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் அளவுக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!