• Apr 14 2025

ஏண்டி விட்டு போன..? சிம்புவின் குரலில் வெளியாகிய "dragon" பட பாடல்...இதோ

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அனுபாமா நடிப்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகவுள்ள "dragon" திரைப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.இப் படத்தினை ags entertainment தயாரித்துள்ளதுடன் Leon James இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் நடிகர் சிம்பு பாடியுள்ள காதல் தோல்வி பாடலான "ஏன்டி விட்டு போன..?" எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது."ஒரு நொடியில் காதல் நெஞ்சை உடைத்தாயடி " என ஆரம்பிக்கும் இப் பாடலினை சிலம்பரசன் உருகி உருகி பாடியுள்ளார்.


"லவ் டுடே " படத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கும் பிரதீப் இப் படத்திலும் மிகவும் அருமையாக நடித்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் இப் பாடல் வெளியாகி சிலமணிநேரத்துக்குள் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளதுடன் சிம்பு ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.வீடியோ இதோ..

Advertisement

Advertisement