• Dec 29 2025

"பேச்சி" குறும்படத்தை கண்ணீருடன் பாராட்டிய ராகவா லாரன்ஸ்.! வெளியான பதிவு இதோ.!

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

இளம் இயக்குநர் அபிலாஷ் இயக்கத்தில் உருவான புதிய குறும்படம் ‘பேச்சி’ யூடியூப் வழியாக வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் வெளியீட்டில் வந்த இந்த குறும்படம், சிறிய காலத்திலேயே ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. படத்தின் கதைக்களம், நடிப்பு மற்றும் இசை அனைத்தும் குறும்படத்தின் தனித்துவத்தைக் காட்டுகின்றன.


தற்பொழுது, இந்த குறும்படத்தைப் பாராட்டி பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், குறும்படத்தின் நாயகன் ராஜமுத்துவை பெருமையாக தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் தனது பதிவில், “பேச்சி குறும்படத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். இந்தப் படத்தை பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.


ராஜமுத்து, இத்தகைய நடிப்பை வெளிப்படுத்தியதைக் காண்பது உண்மையிலேயே ஒரு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது. அவனுடைய வளர்ச்சியை என் கண் முன்னே கண்டு, இன்று அவன் இத்தகைய பெரிய உயரங்களை எட்டியிருப்பதைக் காண்பதில் பெருமை கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவின் பின்னர், சமூக வலைத்தளங்களில் குறும்படம் மற்றும் நாயகன் ராஜமுத்து குறித்து பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

Advertisement

Advertisement