தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகராக பார்த்திபன் திகழ்ந்து வருகின்றார். இவர் இறுதியாக இயக்கிய படம் தான் டீன்ஸ். மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக காணப்படும் பார்த்திபன் அடிக்கடி பல தகவல்களை வெளியிட்டு வருகின்றார். சினிமா ரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் இவருடைய பதிவுகள் கவனம் ஈர்க்கும்.
பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த பார்த்திபன் புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்த படத்தின் போதே நடிகை சீதாவுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனாலும் கிட்டத்தட்ட 11 வருடங்களில் இவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதற்குப் பின்பு சீதா சின்னத்திரை நடிகர் ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் அவரையும் விவாகரத்து செய்தார். தற்போது தனிமையில் வசித்து வருகின்றார் சீதா .

இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது. அதன்படி அவருடைய பதிவில், ப்ரம்ம முகூர்த்தத்தில் அத்வைதம்! - இரண்டற்ற நிலை. ஆன்மா ப்ரமத்துடன் கலப்பது. ஆனால் என் ஆன்மா சினிமாவுடன் கலந்தது. என் தவம், தியானம், மற்றும் வேண்டுதல்கள் யாவும் மீண்டும் சினிமாவில் பரபரப்பாய் இயங்குவதும், நிறையப் படங்கள் பல்வேறு மொழிகளில் வெற்றியுடன் செய்தலுமே!அதைத்தவிர அத்வைதம் வேறில்லை.
சமீபத்தில் நண்பர் ஶ்ரீனிவாசன் அவர்களின் இல்லத்திற்கு இறுதி மரியாதை செலுத்த சென்று வந்தது கேரளாவெங்கும் பரவி,மலையாள நண்பர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சியில் பங்குக் கொண்டதைப் போல நன்றி தெரிவிக்கின்றனர். அது ஶ்ரீனி மீது அவர்கள் கொண்டிருக்கும் அளவற்ற அன்பிற்கும், நட்புக்கு நான் கொடுத்த முக்கியத்திற்கு கிடைத்த மாண்புமிகு மரியாதையாகப் பார்க்கிறேன்.!
இன்பாக்ஸில் வந்துக் குவிந்துள்ள கணக்கற்ற messages என்னை mesmerising செய்கின்றன. அனைவருக்கும் எனதன்பு இதன்வழி உரித்தாகுக. நான் எதையுமே இதயத்திலிருந்தே துவங்குகிறேன். இந்த photo-வும் அப்படியே. ஒரு புதுமுகம் போல….. அகம் முழுக்க ஆர்வமும் அதற்குரிய திறன் நிறைத்து, வண்ணமயமான மகிழ்ச்சியை பூசியபடி எடுக்கப்பட்து. இதைக்கண்ட நண்பர் தினேஷ்(EP of mythri movie makers) இது AI மூலம் இது உருவாக்கப் பட்டதா? என்றார்.
நாற்பது நொடிகள் நிதானித்து “ஆம்” என்றேன். ஆனால் Artificial Intelligence அல்ல,Adangaatha Interest ! (அடங்காத இலக்கு வெறி என்றும் கொள்ளலாம்)Ustaad Bhagat singh’ வெளி வந்ததும் நிறைய படங்கள் செய்யப் போகிறீர்கள் அதில் எங்கள் நிறுவனத்திற்கே மூன்று செய்யப் போகிறீர்கள் advance(உடன்) வாழ்த்துக்கள் கூறி சென்றார் 26 எனக்கு மட்டுமல்ல நமக்கெல்லாம் உயர வரம் தருமே!
Listen News!