விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கலந்து கொண்ட 20 போட்டியாளர்களில் ஒருவர் தான் ரம்யா ஜோ.

ரம்யா, திருவிழாக்களில் இடம்பெறும் ஆடல் பாடல்கள் நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். அவரது நடனம், கவர்ச்சி மற்றும் மேடை அனுபவங்கள் அவரை ரசிகர்களின் மனதில் தனித்துவமாக இடம் பிடிக்கச் செய்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய காரணமாக ரம்யா, தனது இமேஜை மாற்றிக் கொள்ள விரும்பினார் எனக் கூறியிருந்தார். நிகழ்ச்சி நடுவில் சில சவால்களை எதிர்கொண்ட ரம்யா தனது பிக் பாஸ் பயணத்தை பாதியிலேயே முடித்து அதிலிருந்து வெளியேறினார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர், மீண்டும் தனது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளைத் தொடர ஆரம்பித்தார். இதனால், அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்தன.
இதுகுறித்து சமீபத்திய நேர்காணலில் ரம்யா, “எனக்கு செலவுக்கு 100 ரூபா யார் கொடுப்பா? என் பிரச்சனைகள் எனக்கு தான் தெரியும். என் வாடகை, EMI மற்றும் பிற செலவுகள் யாருக்காவது தெரிகிறதா? எனக்கு சம்பளம் வர லேட் ஆகும். அதனால் தான் நான் வேலை செய்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு மாதம் நடக்க உள்ளது. எனவே, என் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நான் ஆடுகிறேன்.” என உருக்கமாக கூறியுள்ளார்.
இந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவியதும், ரசிகர்கள் இரண்டு பகுதியாய் பிரிந்து கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் ரம்யாவின் உண்மையான வாழ்க்கை பிரச்சனையை புரிந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர், அதே நேரத்தில் மற்றோர் பகுதி, பிக் பாஸ் அனுபவத்தை முறையாகப் பயன்படுத்தவில்லை என்று விமர்சித்தனர்.
Listen News!