பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் பொதுவாக பரபரப்பாக இருக்கும் குறிப்பாக முக்கிய கேரக்டர்களின் பிறந்த நாளுக்கும் அப்படியே அப்டேட் வெளியிடப்படும். ஆனால் விஜய் சேதுபதி தற்போது சத்தமின்றி ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். விஜய் சேதுபதி தற்போது "ஏஸ்" மற்றும் "ட்ரெயின்" எனும் இரண்டு படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் திடீர் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இவர் இயக்குநர் பாண்டிராஜ் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கின்றார். இதில், நித்யா மேனன் அவருடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் இப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளதுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், மற்றும் ட்ரெய்லர் ஆகியவை விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பினை முடித்த படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
Listen News!