தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் சத்யராஜ், வெறும் சினிமா மட்டுமல்லாமல் சமூக விவாதங்களிலும் தனது கருத்துகளை தெளிவாக சொல்லும் திறமை மிக்கவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் அளித்த கூற்றுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவி, பெரும் விமர்சனத்தையும், பாராட்டையும் ஏற்படுத்தி வருகின்றன.

அந்த நேர்காணலில் சத்யராஜ், “நடிகனுக்கு நடிக்க மட்டும் தான் தெரியும். சமூகத்தில இருக்கிற மிகப்பெரிய தப்பே, நடிகரை ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு நினைக்கிறது தான். நடிகன ஏன் தலையில தூக்கி வைச்சு கொண்டாடுறீங்க?
நாங்க ‘ஸ்டார்ட் காமெரா’ன்னா நடிப்போம், அவ்ளோ தான். நாங்க யாரும் பெரியாரோ? அம்பேத்கரோ இல்ல.” என்று கூறியுள்ளார். இந்த கூற்றுக்கள் திரையுலகையும், ரசிகர்களையும் சிந்திக்க வைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!