இந்திய திரையுலகில் பல மொழிகளை ஒன்றிணைக்கும் வகையில் உருவாகும் மிகப்பெரிய படங்களில் ஒன்று தான் ‘PATRIOT’. மலையாள சினிமாவின் மிகச்சிறந்த நாயகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால், சிறந்த நடிகராகக் கருதப்படும் பகத்பாசில், தமிழ் மற்றும் தென்னிந்திய ரசிகர்களின் நாயகி நயன்தாரா, என பல பிரபலங்கள் ஒரே படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், 'PATRIOT' திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டீசர் வெளியாகி சில மணி நேரங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் எப்போது வெளியாகும் என ஆவலோடு காத்திருக்கின்றனர். யூடியூபில் வைரலான டீசர் இதோ.!!
Listen News!