தமிழ் திரையுலகத்தில் தனிச்சிறப்புடன் இடம் பிடித்திருக்கும் நடிகர் அஜித் குமார், வெறும் நடிப்பால் மட்டுமன்றி, தனது பல்வேறு திறமைகளாலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றார். இவரது பல்வேறு விதமான ஆளுமையில், முக்கியமான ஒன்றாக திகழ்வது மோட்டார் மற்றும் கார் பந்தய ஈடுபாடாகும்.
இப்போதெல்லாம், நடிப்பை தற்காலிகமாக விலக்கி விட்டு, தனது ஆர்வத்தை ரேசிங் உலகில் முழுக்க முழுக்க காட்டி வருகிறார் அஜித் குமார். இந்நிலையில், சமீபத்தில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில், அவர் தலைமையிலான ஏ. கே. ரேசிங் அணி (AK Racing Team) மூன்றாவது இடத்தைப் பிடித்து அபாரமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
ஸ்பெயினின் பிரசித்திபெற்ற ரேஸ் டிராக்கில் நடைபெற்ற இந்த போட்டி, உலகளாவிய ரேசிங் குழுக்களின் திறமையை சோதிக்கக்கூடிய முக்கியமான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதில், பல்வேறு முன்னணி ரேசிங் குழுக்களுடன் போட்டியிட்டது அஜித் குமாரின் AK Racing Team. இதற்கு முன்னர், துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்திலும், அஜித் குமார் கலந்து கொண்டு தனது அனுபவத்தையும், வீரத்தையும் காட்டியிருந்தார். அந்த வெற்றிக்குப் பிறகு, பார்சிலோனாவில் அவரது அணி அதிக படியான சவால் மற்றும் திறமையை வெளிப்படுத்தி, 3வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!