தனுஷ் இயக்கத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் ரிலீசாக உள்ள திரைப்படம் தான் இட்லி கடை. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் ஹாப் உருவாகியுள்ளது. இந்த படத்தை தனுஷ் இயக்கி நடிப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான NEEK திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனினும் இட்லி கடை படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
இந்த நிலையில், சமீபத்தில் இட்லி கடை படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் இந்த படம் இளைஞர்களை விட குடும்ப ரசிகர்களை வெகுவாக கவரும் என தங்களுடைய கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே குடும்பங்களை கவரும் வகையில் படங்கள் எதுவும் அமையவில்லை. ஆனால் அந்த ஏக்கத்தை இட்லி கடை படம் தீர்க்கும் என நம்பப்படுகிறது.
குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி, 3BHK போன்ற ஒரு சில படங்களின் வரிசையில் இட்லி கடை படமும் இடம்பெறும் என படத்தை பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த படம் வசூலிலும் அதிக லாபம் மட்டும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இட்லி கடை படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இன்னும் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் போஸ்டர் பகிர்ந்து புக்கிங் ஓபன் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Listen News!