தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழும் லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த படத் திட்டம் குறித்து மீண்டும் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணிபுரிவார் என எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ், தற்போது அந்த திட்டத்தை விட்டு விலகி, நடிகர் கார்த்தி நடிக்கும் “கைதி 2” படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு, லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எடுக்கவுள்ளதாக செய்தி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கூட்டணி தமிழ் சினிமாவின் மிகப்பெரிய திட்டமாக பேசப்பட்டது.
ஆனால், சமீபத்திய தகவல்களின் படி, லோகேஷ் ரஜினிகாந்திடம் சொன்ன சப்ஜெக்ட் அவருக்கு பிடிக்காததால், அந்த கூட்டணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், லோகேஷ் தற்பொழுது கைதி-2 படத்தில் இறங்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளிவந்த “கைதி” திரைப்படம், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி, தமிழ் சினிமாவுக்கு புதிய பரிமாணத்தை கொண்டு வந்தது. கார்த்தி நடித்த அந்த படத்தில், தந்தை-மகள் பாசம், நெஞ்சைத் துளைக்கும் இசை, நெருடலான திரில்லர் என அனைத்தும் இருந்தது.
படம் வெளியானதும் ரசிகர்களிடையே “கைதி 2 எப்போது வரும்?” என்ற கேள்வி எழுந்தது. கடந்த 6 ஆண்டுகளாக அந்த எதிர்பார்ப்பு குறையாமல் ரசிகர்களின் மனதில் ஒலித்து வந்தது. இந்நிலையில், இப்போது கிடைத்த தகவல் அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!