பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 9 தற்போது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் புதிய சண்டைகள் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்துள்ள இந்த நிகழ்ச்சி, தற்போது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக உள்ள ஆதிரை மற்றும் FJ இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசொட்டில், ஆதிரை மற்றும் FJ இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. FJ இன் நடத்தை குறித்து ஆதிரை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது,“ஒரு நாள் நல்ல ஜாலியாக பேசி ரெமோவைப் போல இருக்கிறாய். இன்னொரு நாள் கோபமாக அந்நியனைப் போல இருக்கிறாய்... அது ஏன் என்று எனக்கு விளக்கம் சொல்லு..!” என்று ஆதிரை FJ இடம் கேட்டுள்ளார்.
அதற்கு FJ எந்தப் பதிலும் கூறவில்லை. இவ்வாறாக FJ மற்றும் ஆதிரைக்கு இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!