கரூரில் நடந்த துயரமான சம்பவத்திற்குப் பிறகு, நடிகர் விஜய் எந்த வகையில் உதவி செய்யப் போகிறார் என்ற விவாதம் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வலைப்பேச்சு யூடியூப் சேனல் மூலம் அடிக்கடி சமூக மற்றும் சினிமா தொடர்பான கருத்துகளை பகிர்ந்து வரும் பிஸ்மி, தற்போது விஜய் குறித்து வெளியிட்ட கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் கரூரில் நிகழ்ந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டனர், மேலும் அதனைத் தொடர்ந்து அரசியல், சமூக, சினிமா பிரபலங்கள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், நடிகர் விஜய் குறித்து சிலர் சமூக வலைத்தளங்களில் பல எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினர். இதற்கிடையில், பிஸ்மி வெளியிட்ட வீடியோவில் விஜயின் அணுகுமுறை குறித்து பேசினார். அவரது கருத்து, “விஜயின் செயல் முறை தான் உண்மையான ஆறுதல்” எனக் கூறியிருந்தார் பிஸ்மி.

மேலும், “கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்குப் போய் சந்திப்பது மட்டும் ஆறுதல் இல்லை. ஒரு உதவி பெறும் போது ஊடகங்கள் வந்தால் அது விளம்பரம். கரூருக்கு விஜய் சென்றால் திரும்பவும் கூட்டம் கூடும். பாதிக்கப்பட்டவர்களின் privacy பாதிக்கப்படும். அவர்களின் வாழ்வில் இறுதி வரை துணை நின்றால் தான் அது உண்மையான ஆறுதல். இப்போதைய தேவை, " நான் உங்களுடன் இருக்கிறேன்.." என்று சொல்லுவது தான் நம்பிக்கை.... அதைத் தான் விஜய் செய்கிறார்.” எனவும் தெரிவித்திருந்தார்.
பிஸ்மியின் இந்த கருத்து வெளிவந்த சில மணி நேரங்களுக்குள், யூடியூப்பிலும் டுவிட்டரிலும் வைரலாக பரவியது. பல விஜய் ரசிகர்கள், பிஸ்மியின் பேச்சை பகிர்ந்து, “இது தான் உண்மையான பார்வை” என்று கருத்துரைத்துள்ளனர்.
Listen News!