• Sep 14 2024

தங்கலானுக்கான வரவேற்பை கண்டு அனைவருக்கும் நன்றி சொல்லும் ஜி.வி

Thisnugan / 4 weeks ago

Advertisement

Listen News!

பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் உலக அளவில் இன்று வெளியாகியிருக்கிறது சியான் விக்ரமின் தங்கலான் திரைப்படம்.வரலாற்று உண்மையுடன் கற்பனையை கலந்த கதையை எடுத்து வந்திருக்கும் பா.ரஞ்சித் தனது வழக்கமான பாணியுடன் பிரம்மாண்டம் என்ற ஒன்றை சேர்த்துள்ளார்.

KGF - Plot, Cast, Crew, Trailer ...

எங்கும் நேர்மறையான விமர்சனங்களுடன் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் தங்கலான் படத்தின் முக்கிய ஓர் ப்ளஸ் என்றால் அது ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை என்றே சொல்லலாம்.அவர் நேற்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னது போன்றே தங்கலான் கொண்டாடப்படுகிறது.

GV Prakash Speech | Thangalaan Press Meet | Chiyaan Vikram | Pa Ranjith |  Parvathy | Studio Green

இக் கொண்டாட்டத்திற்கான காரணங்களில் தானும் ஒரு பங்கை எடுத்துக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.படத்தின் பப்ளிக் ரிவியூவில் ஜி.வி யின் இசையை பாரட்டாது எவரும் சென்றதாக இல்லை.இப்படி திரும்பும் திசையெங்கும் வரவேற்பை பெற்றுள்ளது தங்கலான் திரைப்படம் 

Official Trailer | Chiyaan Vikram ...

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர்  ஜி.வி.பிரகாஷ்குமார் இத்தகைய பெரும் வரவேற்புக்கு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளதுடன் தனது குழுவிற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.மேலும் அவரது பதிவில் "கடவுளே... தங்கலனுக்கான இந்த அற்புதமான அன்புக்கு நன்றி ... உங்கள் அன்பால் நிரம்பி இதயம் வழிகிறது.... 🙏முழு இசை குழுவிற்கும் நன்றி, பொறியாளர் மற்றும் எனது அனைத்து புரோகிராமர்கள் ... பாடகர்கள் பாடலாசிரியர்கள் ... மற்றும் கடைசியாக ஆனால் எனது இயக்குனர் ரஞ்சித் மற்றும் சியான் விக்ரம் சாருக்கும்" நன்றியை தெரிவித்துள்ளார்.


 

Advertisement

Advertisement