• Oct 13 2024

தெறிக்கும் கோட் மூவி அப்டேட்... வைரலாகும் தளபதின் போஸ்டர்... ட்ரெய்லர் ரிலீஸ் எப்போதெரியுமா?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் தளபதி விஜயின் அடுத்த படமான "கோட்" வருகிற செப்டம்பர் 5ஆம் திகதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தமிழ் நாட்டின் மொத்த தியேட்டர்களிலும் "கோட்" திரைப்படம் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதன் ட்ரெய்லர் ரிலீஸ் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. 


அண்மையில் யுவனின் இசையில் வெளியான "கோட்" படத்தின் பாடல் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையிலும் யூடியூப் வலைதள பக்கத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை கடந்துள்ளது.  இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் "கோட்" படத்தின் புதிய செய்தியொன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 


தளபதியின் "கோட்" படத்தின் ட்ரைலரானது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 இல் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது எதிர் வரும் 17ம் திகதி மாலை 5 மணியளவில் கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என திரைப்பட குழு அறிவித்துள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் குஷியில் குதிக்கின்றனர். 

Advertisement