2013ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் தனது கல்லூரி தோழியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 12 வருடங்களாக இணைந்து வாழ்ந்த இவர்கள் இருவரும், குடும்ப பிரச்சினை காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
இதை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் இருவரும் ஒரே காரில் வந்து விவாகரத்து கோரியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கியது. ஆறு மாத காலம் முடிந்த பின்பு இந்த வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன் போது ஜிவி பிரகாஷும் சைந்தவியும் நேரில் ஆஜர் ஆகினர்.
தாங்கள் சேர்ந்து வாழ விரும்பவில்லை. பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக தெரிவித்துள்ளனர். குழந்தையை சைந்தவி கவனத்திற்கு கொள்வதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜிவி தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி , ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார். இவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!