விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறகடிக்க ஆசை சீரியல் மூன்று இளம் ஜோடிகளை மையமாகக் கொண்டு கதைகளை நகர்த்தி வருவதோடு, இதில் அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனாலையே இந்த சீரியல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது.
இந்த சீரியலில் ரோகிணியின் கேரக்டர் நெகட்டிவ் ஆக இருந்தாலும் இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் எகிறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. ரோகிணியின் தில்லுமுல்லு விவகாரங்கள் வெளிவரும் போது ரசிகர்களும் உச்சகட்ட மகிழ்ச்சியில் காணப்படுவார்கள்.
அதே நேரத்தில் முத்துவுக்கு நிகரான கேரக்டராக ஸ்ருதி காணப்படுகின்றார் . இவரும் என்ன சம்பவம் நடந்தாலும் நேராக தட்டிக் கேட்கும் தைரியமான ஒருவராகவும், நியாயத்தை பேசும் ஒருவராகவும் இந்த சீரியலில் வலம் வருகின்றார்.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடிக்கும் சல்மா அருண் மற்றும் ஸ்ருதி கேரக்டரில் நடிக்கும் ப்ரீத்தா ஆகிய இருவரும் ஜாலியா இருக்கும் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதோ அந்த வீடியோ,
Listen News!