தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கரூர் பரப்புரையில் ஈடுபட்டபோது, அங்கு அவரை பார்க்க முற்பட்ட மக்கள் கூட்டத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 41 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சமும், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் விஜய் மீது குற்றம் சாட்டப்பட்டு அவரை கைது செய்ய வேண்டும் என ஒரு சாரார் கோஷம் எழுப்பி வருகின்றனர். அதிலும் முக்கியமாக நடிகை ஓவியா தனது இன்ஸ்டா பக்கத்தில் விஜயை கைது செய்ய வேண்டுமென பதிவிட்டு இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் ஓவியாவின் பதிவுகளை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை ஆபாசமாகவும் திட்டி தீர்த்தனர். அதனையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயை அரெஸ்ட் பண்ண வேண்டும் என பதிவிட்டுள்ளார் நடிகை ஓவியா.
மேலும் அவரது பதிவில், கரூர் சம்பவத்திற்கு பிறகு ரஜினி சார், அஜித் சார் மற்றும் சூர்யா சார் ஆகியோரின் ரசிகர்கள் சரியான பாதையில் செல்கின்றார்கள் என்று தோன்றுகிறது. இதனால் அவர்கள் மீது எனக்கு மரியாதை அதிகரித்துள்ளது.
ஆனால் விஜய் இளைஞர்களை தவறாக வழி நடத்துகின்றார். தீங்கு விளைவிக்கும் ட்வீட்களை பதிவு செய்து வன்முறையை உருவாக்குகின்றார். அவர் தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றுகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!