• Jan 19 2025

மாமியாருக்கு செருப்படி கொடுத்த கோபி.. ராதிகா போட்ட கண்டிஷன்! வெளுத்து வாங்கிய ஈஸ்வரி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா  வீட்டிற்கு பாக்கியா வந்து ஈஸ்வரிக்கு சாப்பாடு கொடுக்கிறார். பாக்கியா வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும் போதே கமலா,ஏன் இங்க வந்த என்று கேள்வி கேட்கிறார். அங்கு வந்த ஈஸ்வரி இவ கூட என்ன பேச்சு என்று பாக்கியாவை உள்ளே அழைத்து செல்கிறார்.

பாக்கியா சாப்பாடு கொடுத்து போன பிறகு, ராதிகா வந்து பாக்கியா இனி இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்ல, அதை சொல்ல நீ யாரு என்று ஈஸ்வரி சண்டை போடுகிறார். மேலும் நீயும் கோபியும் பாக்யா வீட்டுக்கு வந்தபோது பாக்யா இப்படித்தானா பண்ணினா என சப்போர்ட் பண்ணி பேசுகிறார். மேலும் நான் இங்கே இருக்க மட்டும் பாக்கியா வருவா என்று கண்டிப்பாக சொல்லுகிறார் ஈஸ்வரி.


இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த கோபி போனில் பேசிக் கொண்டிருக்க, கமலாவும் ராதிகாவும் கோபியுடன் பேசுவதற்கு நிற்கின்றார்கள். இதன்போது பாக்கியா இனி இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்ல, அப்ப நீ அம்மாவை பார்த்துக் கொள்ளுவியா? உங்களால் தான் அம்மா ஹாஸ்பிடலுக்கு போனவ என்று கோபி சொல்லுகிறார்.

இதனால் ராதிகா கோபப்பட்டு போகவும், கமலா வந்து உங்களை என்னவோ நினைச்சேன் மாப்பிள்ளை என்று சொல்ல, நானும் என்னவோ நினைச்சேன். ஆனா நீங்கதான் ராதிகாவை தூண்டி விடுறீங்க என கமலாவுடன் வாக்குவாதப்படுகிறார் கோபி.

இறுதியாக இனியாவின் பிறந்தநாளுக்கு நைட் 12 மணிக்கு எல்லோரும் முழித்திருந்து விஷ் பண்ணுகிறார்கள். ஆளாளுக்கு ஒரு கிஃப்ட் ஆக கொடுத்து இனியாவை வாழ்த்த, பாக்கியா வழமை போல அட்வைஸ் பண்ணுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement