• Jan 18 2025

ஹிட் அடித்த விஜய் சேதுபதியின் 50வது படம்.. ’மகாராஜா’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படம் ’மகாராஜா’ நேற்று வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன என்பதை பார்த்தோம். படம் பார்த்த அனைவருமே சமூக வலைதளங்களில் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இருவரின் நடிப்பு அசத்தலாக இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனின் அபாரமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு படம் பார்த்தவர்கள் மனதை தொட்டு உள்ளன என்பதும், பல படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுக்கும் புளூ சட்டை மாறன் கூட இந்த படத்தின் பல காட்சிகளை பாராட்டியுள்ளார் என்பதால் இந்த படம் ஒரு வெற்றிப் படம் என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் ’மகாராஜா’ திரைப்படத்திற்கு முன்பதிவு மூலம் மட்டுமே உலகம் முழுவதும் 4 கோடி ரூபாய் வசூல் கிடைத்த நிலையில் தற்போது இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 10 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்கிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக டிக்கெட்டுகள் புக் ஆகியுள்ளன என்பதும் எனவே முதல் நாளை விட சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மிக அதிக வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துக்கு பிறகு 50வது படத்தை வெற்றி படமாக விஜய் சேதுபதி கொடுத்துள்ள நிலையில் இந்த படம் வசூலிலும் சாதனை செய்து 50 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த எந்த படமும் திருப்திகரமான வசூல் இல்லாத நிலையில் ’மகாராஜா’ திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அவர் மீண்டும் உற்சாகமாக தமிழ் திரையுலகில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement