• Nov 24 2025

விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!‘தலைவன் தலைவி’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Roshika / 3 months ago

Advertisement

Listen News!

பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களும் விமர்சகர்களும் இப்படத்திற்கு நல்ல மதிப்பீடு வழங்க, முதல் நாளிலிருந்தே இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.


இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். மேலும் தீபா, செம்பன் வினோத், சரவணன், ஆர்.கே. சுரேஷ், மைனா நந்தினி, காளி வெங்கட் மற்றும் ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் OTT வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தலைவன் தலைவி’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. திரையில் படம் பார்க்க தவறிய ரசிகர்களுக்கான இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

Advertisement

Advertisement