• Oct 12 2025

செந்திலின் வார்த்தையால் உச்சகட்ட கோபத்தில் கோமதி.! குற்ற உணர்ச்சியில் நிற்கும் பழனி...

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்தில் இனிமேல் எனக்கு வண்டி எல்லாம் தேவையில்ல இங்க இருந்து பக்கத்தில தான் என்னோட office நடந்தே போயிடலாம் என்கிறார். அதைக் கேட்ட பழனி இல்ல என்றாலும் உங்க அப்பா உனக்கு வண்டியை தந்து விடமாட்டார் என்று சொல்லுறார். பின் செந்தில் இன்னும் 2மாசத்தில புது வண்டி வாங்கப்போறேன் என்கிறார். இதனை அடுத்து செந்தில் கோமதியை வீட்டை சுற்றிப் பார்க்க வரச்சொல்லுறார்..அதுக்கு கோமதி நான் அதை ஒன்னும் பார்க்கல என்று கோபமாகச் சொல்லுறார்.


மேலும் கோமதி செந்திலைப் பார்த்து நான் ஒன்னும் உனக்காக வரல மீனாவுக்காகத் தான் வந்தனான் என்கிறார். அதனை அடுத்து மீனா கோபமாக பேசுறதைப் பார்த்த செந்தில் எதுக்காக இப்புடி எல்லாம் கதைக்கிற என்று கேட்கிறார். அந்த நேரம் பார்த்து மீனாவோட அப்பாவும் அம்மாவும் அங்க வந்து நிக்கிறார்கள். அங்க வந்த மீனா அப்பா பாண்டியனை காணேல என்று கேட்கிறார்.

மேலும் ஒரு நல்ல காரியத்துக்கு வராமல் வேலை பார்க்கிறது சரியில்ல என்கிறார் மீனா அப்பா. அதனை அடுத்து எல்லாரும் பால் காய்ச்சுற நேரம் பார்த்து பாண்டியன் அங்க வந்து நிற்கிறார். அதைப் பார்த்த எல்லாரும் சந்தோசப்படுறார்கள். பின் பாண்டியன் மீனாவை கூப்பிட்டு கொஞ்ச காசை பரிசாக கொடுக்கிறார். மறுபக்கம் சுகன்யா நாங்களும் இப்புடி ஒரு தனி வீட்டுக்கு வருவமா என்று பழனி கிட்ட கேட்கிறார். 


அதைக் கேட்ட பழனி அதுக்கெல்லாம் அரசாங்க வேலை பார்த்திருக்கணும் என்கிறார். பின் செந்திலோட அக்கா மீனாவைப் பார்த்து குடும்பத்தை ஒரு மாதிரி பிரிச்சிட்ட என்கிறார். அப்புடியே எல்லாரும் செந்தில்- மீனாவுக்கு பரிசு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த பழனி தான் ஒன்னும் கொடுக்கல என்று சொல்லி கவலைப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement