சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து மீனாவுக்கு புது வண்டி வாங்கி கொடுத்ததை பார்த்த மீனாவோட அம்மா ரொம்பவே சந்தோசப்படுறார். அதனை அடுத்து முத்துவும் மீனாவும் வண்டில ஏறி சுற்றி பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த நேரம் பார்த்து பொலீஸ் அவர்களை மறிச்சு வண்டியோட நம்பர் தெரியாம மாலை போட்டு ஓட்டிக்கொண்டு திரியுறீங்களா என்று பேசுறார்.
அதுக்கு முத்து இது புது வண்டி அதுதான் மாலை போட்டுக் கொண்டு ஓடினாங்கள் என்கிறார். அந்த இடத்திற்கு அருணும் வந்து நிக்கிறார். இவங்களைப் பார்த்த அருண் பைன் ஒன்னும் கட்டத் தேவையில்ல போங்க என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை வீட்டில இருக்கிற எல்லாரும் ஸ்ருதியோட புது ரெஸ்டாரெண்டுக்கு போய் நிற்கிறார்கள்.
அந்த ரெஸ்டாரெண்டுக்கு வந்த நீத்து ரவியோட கதைக்கிறதைப் பார்த்த ஸ்ருதியோட அம்மா இவள் ஏன் ரவியோட கதைக்கிறாள் என்று கோபப்படுறார். பின் ஸ்ருதி அண்ணாமலை கையால ரெஸ்டாரெண்டை திறந்து வைக்கிறார். அதனை அடுத்து ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவுக்கு வந்தவங்க மீனா கிட்ட உங்க அம்மா கடையை திரும்ப வைக்கிறதுக்கு காரணம் முத்து தான் என்கிறார்.
அதைக் கேட்ட மீனா ஷாக் ஆகுறார். மேலும் சீதா அதைக் கேட்ட உடனே முத்து கிட்ட போய் நீங்க தான் எங்க அம்மா கடை திரும்ப கிடைக்க காரணம் என்ற உண்மை தெரிய வந்திட்டு என்கிறார். அதைக் கேட்ட முத்து நான் நம்ம வீட்டுக்காகத் தான் செய்தனான் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!