• Oct 12 2025

மாரடைப்பால் காலமானார் பிரபல நடிகர்.. சோகத்தில் திரை பிரபலங்கள்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா மற்றும் பாடி பில்டிங் துறையில் தனித்துவமான இடத்தை ஏற்படுத்தியவர் நடிகர் வரிந்தர் சிங் குமான் (42). பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்தும், அதே நேரத்தில் பாடி பில்டிங் துறையிலும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளை மேற்கொண்டும் வந்தார்.


2009ஆம் ஆண்டு "மிஸ்டர் இந்தியா" பட்டத்தை வென்ற வரிந்தர் சிங், தன்னுடைய உடலமைப்பு, கட்டுப்பாடான வாழ்க்கை முறை மற்றும் தொழில்முறை விருப்பங்களால், பலருக்கும் முன்னுதாரணமாக இருந்தவர். ஆனால் நேற்று (அக். 9) மாலை நடந்த ஒரு துயரச்சம்பவம், அவருடைய உயிரை பறித்து சென்றது.


வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்த வரிந்தர் சிங், அங்கு சோதனைகள் நடைபெறும் போதே திடீரென மாரடைப்புக்கு உள்ளாகினார். உடனடியாக மருத்துவர் குழுவால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், உயிரை காக்க முடியவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சினிமாவில் தனது பயணத்தை பஞ்சாபி மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களின் வழியாக தொடங்கினார். முக்கியமாக, துணை கதாபாத்திரங்கள், வில்லன் ரோல் ஆகியவற்றில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தவர்.


வரிந்தர் சிங்கின் திடீர் மரணச் செய்தி வெளியாகியவுடன், பஞ்சாப் மற்றும் ஹிந்தி திரைப்பட உலகம் மட்டும் அல்லாது, பாடி பில்டிங் துறையிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் இவரது மறைவு குறித்து தங்களது வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement