• Nov 24 2025

பச்சையா நடிக்கிறாங்க! பிரச்சினை உருவாக்குறாங்க! நாமினேஷனில் சிக்கிய ஆடுகள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 தற்போது ஓளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் முந்தைய சீசன்களை கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடாமல் இந்த முறை கொஞ்சம் மந்தமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது பிக் பாஸ். 


இந்நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 8 இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருந்த நிலையில் அடுத்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் ஆரம்பமாகி உள்ளது. அதில் 2 நபர்கள் தெரிவு செய்து காரணத்துடன் சொல்ல வேண்டும். ஆண்கள் பெண்கள் என அனைவரையும் சொல்லலாம் என சொல்லப்படுகிறது. 


இந்நிலையில் சிவகுமார் ரொம்ப சுவிட்டா இருக்குறமாதிரி நடிக்கிறாருனு நினைக்கிறேன். சவுந்தர்யா பிரச்சினை உருவாக்குறாங்க, அவங்களுடைய  நடவடிக்கை நால போட்டிகளை கூட ஒழுங்கா கொண்டு போக முடியல. அருண் கிட்ட எதிரா இருந்து பேச முடியவில்லை, ஜேக்குலின் டக்கு டக்குனு வார்த்தை விடுறாங்க.

d_i_a


நட்பு என்ற பெயரை பாவித்து கேம் விளையாடுறாங்க என்று ஒரு சிலரை போட்டியாளர்கள் நாமினேட் செய்து இருக்கிறார்கள்.  இந்த வாரம் நாமினேட்டில் இருந்து வெளியே தப்பிக்க போவது யார், அல்லது இறுதி வாரத்தில் வெளியேற போவது யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  

Advertisement

Advertisement