• Jan 19 2025

கங்குவா படத்திற்காக பாபி தியோலை பாடாய் படுத்திய மேக்கிங் வீடியோ வைரல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் தான் பாபி தியோல். இவர் சமீபத்தில் வெளியான கங்குவா படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார்.

2023 ஆம் ஆண்டு வெளியான அனிமல் திரைப்படத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடித்த அனிமல் படத்தில் பாபி தியோல் இறக்கமற்ற கொடூர வில்லனாக நடித்து இருப்பார். தனது மிரட்டலான நடிப்பின் மூலம் இந்திய திரை உலகில் சிறந்த வில்லனுக்கான பட்டியலில் இடம் பிடித்தார்.

d_i_a

இவர் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் திரில்லர் திரைப்படமான ரேஸ் 3 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு 2000 ஆண்டு வெளியான படம் ஒன்றிலும் கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார்.


இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தில் பாபி தியோல் உதிரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டி இருப்பார். இதில் இவருடைய நடிப்பு மிகவும்  வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கங்குவா படத்திற்காக நடிகர் பாபி தியோல் ரெடியாகிய மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் அவரை கங்குவா படத்திற்காக செதுக்கிய காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் குறித்த வீடியோவுக்கு கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement