தா.சே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் 'வேட்டையன்' இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்சன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களைக் கடந்த நிலையில் இதற்கான சக்சஸ் மீட் இன்று படக்குழுவினர் பத்திரிகையாளர் முன்னிலையில் நடத்தியுள்ளனர்.

வேட்டையன் சக்சஸ் மீட் முடிந்தவுடன் இந்த படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு இயக்குனர் தா.சே. ஞானவேல் மற்றும் நடிகர், நடிகைகள் பிரியாணி பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த [உகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.



Listen News!