• Jan 19 2025

செல்பியை பகிர்ந்த நாகசைதன்யா! வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்! காரணம் என்ன?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நாகார்ஜுனா நிச்சயதார்த்தப் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து திருமணத்திற்கு இன்னும் சிறிது காலம் இருப்பதாகத் தெரிவித்தார். நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு முதல்முறையாக நாக சைதன்யா, சோபிதா இருவரும் ஜோடியாக லிஃப்டில் செல்பி எடுத்த புகைப்படம் வைரலாகிறது. 


அந்த புகைப்படத்தில் கருப்பு உடையில் கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும் இந்த ஜோடி மிகவும் ஸ்டைலாக இருக்கிறார்கள்.  நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு சோபிதா துலிபாலா சமூக வலைதளங்களில் கடுமையாக டிரோல் செய்யப்பட்டார். இதனால் சோபிதா சமூக ஊடகங்களைப் பெரிதாகப் பயன்படுத்துவதில்லை. அதேபோல் நாக சைதன்யாவும் சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் கடும் விமர்சனத்துக்குள்ளானதால் பெரிதாக சோசியல் மீடியாவை பயன்படுத்துவதில்லை.


இந்த நிலையில் சோபிதா உடன் எடுத்த செல்பி புகைப்படத்தை முதன்முறையாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நாக சைதன்யாவை நெட்டிசன்கள் கமெண்டில் கழுவி ஊற்றி வருகின்றனர். இருவரும் ஒர்ஸ்ட் ஜோடி என கிண்டலடித்து வருகின்றனர். இது டோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.



Advertisement

Advertisement