• Jan 13 2026

முதலமைச்சருக்கு எதிரா படம் எடுத்தா எப்படி விடுவாங்க.? ‘ஜனநாயகன்’ குறித்து பிரபலம் பகீர்.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான ‘ஜனநாயகன்’, ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை, விஜய் ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே திரையரங்குகளில் பேனர், போஸ்டர், கட்-அவுட் என அமைத்து, திருவிழா போல கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், தணிக்கை சான்றிதழ் (CBFC) தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, ‘ஜனநாயகன்’ படம் திட்டமிட்டபடி நேற்று வெளியாகவில்லை. இந்த திடீர் தாமதம், படத்தை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பொங்கல் ரிலீஸாக படம் வெளியாகும் என நம்பியிருந்த நிலையில், வெளியீடு தள்ளிப்போனது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.


‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகைகள் மமிதா பையூ மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல் மற்றும் சமூக கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாகி வந்தது. 

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படம் குறித்து நடிகர் அப்பு குட்டி வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் அளித்த பேட்டியில், படத்தின் வெளியீடு தாமதமானதற்கான காரணம் குறித்து தனது பார்வையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அப்பு குட்டி கூறியதாவது,“எல்லாரும் மதிக்கக் கூடிய முதலமைச்சருக்கு எதிராக படம் எடுத்தா எப்படி விடுவாங்க? எப்படி விடணும்னு எதிர்பார்க்குறீங்க? வாய்ப்பே இல்ல. ஒரு நாட்டையே ஆளக் கூடியவர்களை எப்படி விமர்சனம் பண்ணுவீங்க? அப்புறம் எப்படி படத்தை ரிலீஸ் பண்ண விடுவாங்க? இதை நாம குறை சொல்ல முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்து, ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அப்பு குட்டியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, அரசியல் அதிகாரம் மற்றும் சினிமா இடையேயான உறவை சுட்டிக்காட்டி பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் இதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement