V.J மணிமேகலை சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் விஜய் டிவி சேனலுக்கு வந்தவர். சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இது இவருக்கு நல்ல ரீச் தந்த ஒரு நிகழ்ச்சி.
ஆனால் சமீபத்தில் ஆங்கராக தான் வருவேன் என வாதம் செய்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பை வாங்கினார். ஆனால் பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது விஜய் டிவியை விட்டு அவர் வெளியேறி சென்றுவிட்டார். இவர் போட்ட ஒரு பதிவால் சோசியல் மீடியா தொடர்ந்து இதைமட்டுமே பேசியது.
தற்போது அனைத்தும் ஓய்ந்த நிலையில் மணிமேகலை தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டு அனைவரையும் கவர்ந்துள்ளார். அதாவது தன்னுடைய சொந்த கிராமத்தில் அவர் ஒரு வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் சென்னையில் பிரீமியம் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி அவர் தன் கணவருடன் கிரகப்பிரவேசம் செய்த போட்டோக்களை பகிர்ந்து உள்ளார்.
அதில் அவர் எங்கள் திருமணத்திற்கு பிறகு நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். பத்தாயிரம் ரூபாய் வாடகை கொடுக்கவே சிரமமாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் கஷ்டப்பட்டு இன்று நல்ல நிலையில் இருக்கிறோம். தற்போது சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி இருக்கும் எங்களை வாழ்த்துங்கள் என பதிவிட்டுள்ளார். அதேபோல் அந்த பதிவின் இறுதியில் ஸ்ரீராமஜெயம் மாஷா அல்லாஹ் என குறிப்பிட்டு இருந்தது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்துவான மணிமேகலை உசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் இரு மத கடவுள்களையும் வழிபட்டு வருகின்றனர். இப்படி இருக்க தங்களது கல்யாணம் முதல் தற்போது வரை நாங்கள் இருந்த நிலைமை இப்பொது இருக்கிற நிலைமை என்பனவற்றை விடீயோவாக எடுத்து அதனை சோசியல் மீடியாவில் போட்டுள்ளார். அதில் தனக்கு திருமணம் நடந்த அந்த திகதியில் 7 வருடம் கழித்து வீடு குடிபுகுந்துள்ளனர். அதற்க்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.
Listen News!