• Dec 18 2024

மனைவிக்கு அட்லீ கொடுத்த கிப்ட்! ரிலீசானது பேபி ஜோன் திரைப்படத்தின் அடுத்த பாடல்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் கடந்த  2016 ஆம் ஆண்டு வெளியான வெற்றி திரைபடம் ’தெறி’. இந்த படத்தினை இயக்கியவர் இயக்குனர் அட்லீ. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய், சமந்தா, நைனிகா, எமி ஜேக்சன், ராதிகா சரத்குமார், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியால் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பேபி ஜான் என்ற பெயரில் ரிலீசாக உள்ளது. தெறி  படத்தின் இயக்குனர் அட்லீ தற்போது பேபி ஜான் படத்தின் தயாரிப்பாளர்களாக இருக்கிறார். அட்லியின் உதவியாளர் காலீஸ் இப்படத்தினை இயக்கி வருகிறார்.


விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவான் நடிக்க,  கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகிய இருவரும் நாயகிகளாக இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் பாடல்கள் ரிலீசாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 


d_i_a

இந்நிலையில் ஏற்கனவே நானி மடக்கா பாடல் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது இரண்டாவது பாடலான பிகியில் பூம் பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை தயாரிப்பாளர் அட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அத்தோடு இன்று பிரியாஅட்லீயின் பிறந்தநாள் இந்த பாடலை உங்களுக்கு வழங்க இதைவிட சிறந்த நாள் இல்லை என்று பாடலை பிறந்தநாள் வாழ்த்தாக ஷேர் செய்துள்ளார். இதோ அந்த பாடல்... 





Advertisement

Advertisement