அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று வெளியான புஷ்பா-2 திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்ப்பு பெற்று வருகிறது. பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் நடித்திருந்தனர் புஷ்பா 1 பட்டி தொட்டி எல்லாம் பார்க்கப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்தது. இதனை அடுத்தே புஷ்பா தி ரூல் பாகம் 2 வெளியாகியுள்ளது.
பான் இந்தியா படமாக ரிலீஸாகியுள்ள இந்த படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பு அபாரமாக உள்ளதாம், ரஷ்மிக்கா மந்தனா ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார். விளங்க பஹத் பஷில் மிரட்டி உள்ளார். அத்தோடு படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஒரு பக்கம் வைப்பண்ணி கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் புஷ்பா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதுல பேசப்பட்ட வசனங்களுக்கும் பிரபலமானது. அல்லு அர்ஜுனுக்கென கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் நடனத்துக்கென இருக்கும் ரசிகர்கள் ஏராளம். இப்படி இருக்க புஷ்பா 1, புஷ்பா 2 என இரண்டு பாகத்திலும் புஷ்பராஜ் கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்த வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் சேகர் புஷ்பா 2 டப்பிங் குறித்து பேசியுள்ளார்.
மதன் கார்க்கி நம்ம சென்னை பையன் இப்போ பேன் இந்தியா ஆட்டிஸ்ட்டா இருக்காரு அவர் புஷ்பா படத்துக்கு வசனம் எழுதும் போதே சொன்னாரு ரொம்ப பெரிய டாஸ்க்கா இருக்கும் என்று அப்பயே பதட்டம் வந்துட்டு ஆனா அவரு கொடுத்த நம்பிக்கை தான் புஷ்பா படத்துக்கு வாய்ஸ் பண்ணுனேன்.
புஷ்பா படம் தமிழ்ல இவ்வளோ அழகா வாரத்துக்கு மதன் கார்க்கி முக்கிய காரணம். நாங்க டப்பிங் பண்ணது எல்லாமே படத்துல ஓவராலா நல்லா வந்து இருக்கு மக்கள் கொண்டாடுறாங்க. அதுவே மகிழ்ச்சி என்று கூறி புஷ்பா வாய்ஸ்சை அப்டியே நேரில் பேசி காட்டியுள்ளார் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் சேகர். அத்தோடு புஷ்பா 1 எனக்கு எப்பையுமே இபெசல் தான் எனக்கு அடையாளம் தந்தது புஷ்பா 1 தான் என்று கூறியுள்ளார்.
Listen News!