• May 08 2025

பத்தில 5 பேர் சூரி அண்ணனிற்கே கதை எழுதுகிறார்கள்.!- லோகேஷ் கனகராஜ் பெருமிதம் ....!

Roshika / 16 hours ago

Advertisement

Listen News!

நகைச்சுவை மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சூரி தற்போது ஹீரோவாகவும்  நடித்து வருகின்றார். அந்த வகையில் "மாமன்" பட டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நேற்றயதினம் நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறிய விடயம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

"மாமன்" பட  டிரெய்லர் மே முதலாம் திகதி வெளியாகி  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி ஹீரோவாகவும் , ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளனர். மேலும் இப் படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் என பலர் நடித்துள்ளனர்.


இந்த நிலையில் நேற்றய தினம் நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் கூறியதாவது "அண்ணனின் வளர்ச்சியை பார்க்க பிரம்மிப்பாக இருப்பதாகவும் ,எல்லேருக்கும் மகிழ்ச்சியாகவும் உள்ளது" என்றும் கூறியிருந்தார் .

அதுமட்டுமல்லாமல் நான் இப்போது படத்  தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன் , என்னிடம் கதை  கூற வருபவர்கள் 10 இல் 5 பேர் சூரி அண்ணனுக்குத்தான் கதை எழுதி விட்டு வருகின்றனர். அந்த விடயம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது . சூரி  இன்னும் இன்னும் பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். 


Advertisement

Advertisement