சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா சீதாவுக்கு கல்யாணத்திற்குத் தேவையான பணத்த நாங்க தாறோம் நீ எதுக்கும் கவலைப்படாத என்று சொல்லுறார். இதனை அடுத்து மீனாட அம்மா சீதாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ள கிடைச்சா காணும் என்கிறார். பின் மீனா கோவிலுக்கு மாலை கொண்டு போகும் போது தடுமாறி கீழே விழப் பாக்கிறார். அதனை ஒரு பாட்டி கவனித்துக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து அந்தப் பாட்டி மீனாவக் கூப்பிட்டு உன்னோட புருஷனுக்கு நேரம் சரியில்ல ஏதோ ஒரு பிரச்சன உன் புருஷன் காலை சுத்திக்கிட்டு இருக்கு என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா என்னம்மா இப்புடிச் சொல்லுறீங்க என்று அழுகுறார். மேலும் அவர் ரொம்ப நல்லவர் அவருக்கு எதுவும் நடக்க கூடாது என்கிறார்.
அதைக் கேட்ட அந்தப் பாட்டி நீ எதுக்கும் கவலைப்படாத நீ நினைச்சா அவரைக் காப்பாத்தலாம் என்று சொல்லுறார். மேலும் உன்னோட குணம் மாறாமல் இருந்தாலே உன் புருஷனுக்கு எதுவும் நடக்காது என்று சொல்லுறார் பாட்டி. அதைக் கேட்ட மீனா எனக்கு எதுவுமே புரியல என்று சொல்லிக் கவலைப்படுறார். பின் மீனா பாட்டி சொன்ன எல்லா விஷயத்தையும் முத்துவுக்குச் சொல்லுறார்.
இதனை அடுத்து முத்து நான் கோபம் வராமல் இருக்க சரக்கடிச்சால் காணும் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா நான் உங்களுக்கு ஏதாவது நடந்திரும் என்று பயந்து கொண்டிருக்கேன் நீங்க என்னனா குடிக்கிறதப் பற்றியே கதைக்கிறீங்க என்று சொல்லி அடிக்கிறார். மீனா முத்துவுக்கு அடிக்கும் போது விஜயாவுக்கு தெரியாமல் அடிபடுது. அதனை அடுத்து விஜயா தன்மேல இருக்கிற கோபத்தில தான் அடிக்கிறாள் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!