தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய்யின் சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், ரசிகர்களின் வரவேற்பு ரீதியாகவும் பெரும் சாதனை படைத்துள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் விஜய்யின் அரசியல் கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளதாக கூறப்படுவதால், இது ஒரு சாதாரண திரைப்படம் அல்ல என்ற பார்வை ரசிகர்களிடையே நிலவுகிறது. குறிப்பாக தவெக தலைவர் விஜய் நடிக்கும் படம் என்பதால், அரசியல் ஆர்வலர்களும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் தெலுங்கு வெளியீடு தொடர்பாக சமீப நாட்களாக சில குழப்பங்கள் நிலவி வந்தன. தெலுங்கில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை முதலில் பெற்றிருந்த சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், கடைசி நேரத்தில் திடீரென இந்த திட்டத்திலிருந்து விலகியது.
இதனால் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. இந்த சிக்கல்களுக்கு மத்தியில், தற்போது ரசிகர்களுக்கு நிம்மதி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் தெலுங்கில் ‘ஜன நாயகுடு’ (Jana Nayakudu) என்ற பெயரில் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படத்தின் வெளியீட்டு சிக்கல் முற்றிலும் தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் ‘ஜன நாயகுடு’ திரைப்படத்தை PVR சினிமாஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!