பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்தில் மீனாவைப் பார்த்து எதுக்காக நீ மயில் வீட்ட போய்ட்டு வந்தனீ என்று கேட்கிறார். மேலும், அவங்க அண்ணனை ஏமாத்திட்டு போனவங்க அவங்களை எதுக்காகப் போய் பார்த்தனீ என்று கோபமாக கேட்கிறார். பின் மீனா மயில் அக்கா போன் பண்ணிக்கொண்டிருந்தாங்க அதுதான் அங்க போனான் என்கிறார்.

அதைக் கேட்ட செந்தில் நீ அங்க போனது வீட்ட இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சால் என்ன நடக்கும் என்று ஜோசிச்சியா என்கிறார். அதுக்கு மீனா நீங்க மட்டும் வீட்ட பிடிக்காத வேலை எல்லாம் செய்தீங்க அப்பவெல்லாம் நீங்க யோசிச்சிங்களா என்று கேட்கிறார். அதனை அடுத்து செந்தில் நீ அங்க போனது தப்பு என்கிறார்.
மறுபக்கம் சரவணன் பழனி கிட்ட எல்லா உண்மையும் வீட்ட தெரிஞ்சப்ப கூட அவள் அதை நினைத்து பீல் பண்ணல அதில இருந்து எப்படி தப்பிக்கிறது என்று தான் ஜோசிச்சா என்றதுடன் கல்யாணம் பண்ணாமல் வாழுறது எவ்வளவோ நல்லது என்கிறார். அதைக் கேட்ட பழனி ஷாக் ஆகுறார். அதனை அடுத்து எல்லாரும் சேர்ந்து குடிச்சுக் கொண்டிருக்கிறார்கள்.

பின் கதிரும் சரவணனும் குடிச்சிட்டு வீட்ட வந்திருக்கிறதைப் பார்த்த பாண்டியன் பிரச்சனையால குடிக்க ஆரம்பிக்காதீங்க என்கிறார். அதனை அடுத்து ராஜி இந்தப் பழக்கம் எல்லாம் தேவையா என்று கோபத்தோட கேட்கிறார். அதைக் கேட்ட கதிர் இருந்தாலும் இவளுக்கு இவ்வளவு திமிர் கூடாது என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!