தெலுங்கு திரைப்பட உலகத்தில் அதிக எதிர்பார்ப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் “அகண்டா–2”, ரசிகர்களுக்கு ஒரு அதிரடி தகவலைத் தற்பொழுது தெரிவித்துள்ளது.

நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலய்யா) நடிப்பில் உருவாகும் இந்த பிரமாண்டமான படம், 3D தொழில்நுட்பத்தில் வெளியிடப்படுகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் வெளியாகிய சில மணிநேரங்களிலேயே #Akhanda2 மற்றும் #Balayya போன்ற ஹாஷ்டாக்குகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. மேலும், படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகவல், உலகெங்கும் உள்ள பாலய்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய பண்டிகையாக மாறியுள்ளது. அத்துடன் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த “அகண்டா” படம், தெலுங்கு சினிமாவின் வரலாற்றையே மாற்றிய படம். இந்நிலையில், தற்பொழுது உருவாகிவரும் இரண்டாம் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் மெருகூட்டியுள்ளது.
அகண்டா–2 பற்றிய அறிவிப்பு குறித்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்த நிலையில், இப்போது படக்குழுவினர் வழங்கிய 3D ரிலீஸ் தகவல் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.
Listen News!