தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கு எப்போதும் பிடித்த ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான். இவர் தனது நடிப்பு , ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளும் விதம் என்பவற்றால் பெரும் வரவேற்பைப் பெற்றவர். சமீபத்தில், சிம்பு செய்த ஒரு செயல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

காரில் வெளியில் சென்ற சிம்பு, ஒரு சிக்னலில் நின்ற போது, பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகளை கண்டார். அவர்களைப் பார்த்தவுடன் சிம்பு கையசைத்து “HI” என்று அன்புடன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு மிகச் சாதாரணமாக இருந்தாலும், அது மாணவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. சிம்புவின் சிரிப்பு குழந்தைகளின் மனதில் நிறைய சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைப் பற்றி வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதுடன் ரசிகர்கள் பலரும் "நம்ம ஸ்டார் வேறலெவல்..." என்று கமெண்ட்ஸும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!