• Dec 29 2025

பொங்கலுக்கு செம கலெக்சன் பண்ணப்போகும் "ஜனநாயகன்"... டுவிட்டர் பதிவால் குஷியில் ரசிகர்கள்

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விஜய், தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது திரை வாழ்க்கையின் கடைசி படமாக பேசப்படும் திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. 


விஜய் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம், அவர் சினிமாவுக்கு விடை கொடுக்கும் படமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் கடைசி படம், பொங்கல் ரிலீஸ், அரசியல் பின்னணி கொண்ட கதை என பல காரணங்கள் ஒன்றாக இணைந்திருப்பதால், இந்த படம் ஒரு சாதாரண ரிலீஸாக அல்லாமல், ஒரு திருவிழாவாகவே ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.


இதுவரை வெளியான படத்தின் அப்டேட்கள், தலைப்பு, தகவல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தைப் பற்றிய முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், சிலர் படத்தை பார்த்ததாகவும், படம் நன்றாக வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

படத்தை பார்த்த சிலர், படத்தின் கதையும், விஜய்யின் நடிப்பும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருப்பதாக ரிப்போர்ட் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பிரபலமான ஒரு திரையரங்க உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அந்த பதிவில், “இந்த படத்தை பார்த்த சிலர் படம் நன்றாக வந்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த பொங்கல் நமக்கு செம கலெக்சன் மா..” என்று கூறியுள்ளார். இந்த பதிவு வெளியாகிய சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement