• Jan 19 2025

மம்முட்டிக்கு ஜோடி சேரும் பிரபல நடிகை.. இந்த காம்போ வெற்றி பெறுமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் மம்முட்டி. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பிரமயுகம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது தமிழில் பிரபல இயக்குனராக காணப்படும் கௌதம் மேனன் இயக்கத்தில் இணைய உள்ளார். மம்முட்டியுடன் இதற்கான பேச்சுவார்த்தை 2014 ஆம் ஆண்டு இருந்தே நடந்து வருவதாகவும் இறுதியில் இந்த படத்தின் சூட்டிங் எதிர்வரும் 20 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.

மலையாளத்தில் இதுவரை ஒரு படத்தையும் இயக்காமல் இருந்த கௌதம் மேனன் இந்தப் படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.


இந்த நிலையில், எதிர்வரும் 20 ஆம் தேதி மம்முட்டி நடிக்கும் படத்திற்கான ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், இந்தப் படத்திற்கு ஹீரோயின் யார் என்பதற்கு விடை கிடைத்துள்ளது.

அதன்படி நடிகை சமந்தா மம்முட்டியுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் நடிகை சமந்தாவும் முதல் முறையாக மலையாளத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு சமந்தா, நயன்தாரா ஆகிய  இருவருடனும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தற்போது நடிகை சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவல்கள் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement