தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி நடிகராக திகழ்கிறார். அவர் நடித்த படங்கள் பெரும் வசூல் சாதனை புரிந்து, ரசிகர்களின் மனதில் நிலைத்த இடத்தைப் பெற்றது. அவர் தற்பொழுது அரசியல் வேலைகளிலும் முன்னின்று செயற்பட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை சினேகா விஜய் குறித்து பேசிய கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

சினேகா அதன்போது, “எங்களைப் போல சினிமாக்காரங்க சொல்றதால நடிகர் விஜய் ஜெயிச்சிடமாட்டாரு.. மக்கள் நினைக்கணும் அவங்க மனசு வைச்சால் தான் மாற்றம் உண்டாகும். அதுவரை பொறுத்து தான் ஆகணும். நடிகர் விஜய் சாருக்கு என்னோட வாழ்த்துக்கள் உண்டு.” எனக் கூறியுள்ளார்.

சினேகா சொன்னது போல, சில சமயங்களில் திரை உலகில் நடிக்கும் நடிகர்கள் தங்களின் திறமை, குணம் அனைத்தையும் காட்டினாலும், மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டியது அவசியம். “மக்கள் நினைக்கணும், அவங்க மனசு வைச்சால் தான் மாற்றம் உண்டாகும்” என்ற சினேகாவின் கருத்து இதையே வலியுறுத்துகிறது. இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!