விஜய் டிவியில் சமீபத்தில் முடிவுக்கு வந்த ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 8. இந்த நிகழ்ச்சியை முதன் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, இதன் இறுதியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார். இரண்டாவது ரன்னரப்பாக சௌந்தர்யா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பித்ததில் இருந்து ரசிகர்கள் தமது வெறுப்பை கொட்டி தீர்த்து வந்தார்கள். அதற்கு காரணம் இந்த முறை பங்கேற்ற போட்டியாளர்களுள் அதிகமானவர்கள் விஜய் டிவி பிரபலங்களாகவே காணப்பட்டார்கள். மேலும் இவர்கள் சரியான கன்டென்ட் கொடுக்காமல் சலிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே செயல்பட்டனர்.
d_i_a
எனினும் இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் தான் ஆட்டமே சூடு பிடித்தது. பலரும் பிஆர் வைத்து இருப்பதாக பேசப்பட்டது. இறுதியில் பலரும் எதிர்பார்த்தபடி முத்துக்குமரன் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், பிரபல சேனல் ஒன்றுக்கு சௌந்தர்யா பேட்டி கொடுத்துள்ளார். இதன் போது அவர் பிஆர் பற்றி பேசியுள்ளார். தற்போது இவருடைய பேட்டி வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறுகையில், நான் பிஆர் டீம் வைத்து தான் வெற்றி பெற்றதாக சொல்லுகின்றார்கள். எனக்கு இருக்கிற பிஆர் என்றால் அது ரசிகர் தான். அவர்களால் தான் நான் வெற்றி பெற்றேன். ஆனால் எனக்கு பிஆர் இருக்குது என்று சொல்லி நிறைய பேர் ரகசியமாகவே பிஆர் வைத்திருந்தார்கள். அவர்களைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.
யாரை கேட்டாலும் பிஆர் சப்போர்ட் உங்களுக்கு இருந்துச்சா? என்று தான் கேட்கிறார்கள். எனக்கு தெரிஞ்சு இந்த சீசன்ல பிஆர் வைத்து ஹைலைட் ஆன ஒரு பர்சனா என்ன தான் நினைக்கிறேன். ஆனால் கடைசியில் என்னை எல்லாரும் சாட்டிவிட்டு பிஆர் வைத்தவர்கள் எல்லோரும் தப்பி விட்டார்கள் என கலக்கலாக பேசியுள்ளார் சௌந்தர்யா .
Listen News!