விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த " கலக்கப் போவது யாரு? " என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து கொண்டவரே பாலா. இவர் தனது நகைச்சுவையான காமெடியால் மக்கள் மனங்களை கொள்ளை கொண்டுள்ளதுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாளராகவும் காணப்படுகின்றார்.
அதன்பின், குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. இவரது நகைச்சுவையை பார்த்த இயக்குநர்கள் பாலாவிற்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தி கொடுத்தனர். இத்தகைய பாலா கொஞ்ச நாட்களாக சமூக சேவைகளை நடிகர் ராகவா லாரன்ஸுடன் இணைந்து செய்து வருகின்றார்.
பாலா மக்களுக்கு அடிப்படையில் தேவையான அனைத்து உதவிகளையும் தனது முயற்சியால் செய்து வருகின்றார். தற்பொழுது அவர் பற்றிய தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறுகையில், தான் மக்களுக்காக கொடுத்த 5 அம்புலன்ஸ்களில் 1100 பேர் உயிர் பிழைத்து உள்ளனர். மேலும் பல கர்ப்பிணி தாய்மார்கள் என்னுடைய அன்புலன்சில் சென்று180 குழந்தைகளை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நான் இப்படி சமூக சேவை செய்து கொள்வதனால் விரைவில் பிச்சை எடுப்பேன் என சிலர் சொல்லி உள்ளார்கள். ஆனால் மக்களுக்கு நல்லது செய்வதற்காக பிச்சை எடுக்கவும் நான் தயாராக உள்ளேன் என பாலா கூறியுள்ளார்.
Listen News!