தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன். இவர் நடிப்பில் இறுதியாக லியோ படம் வெளியானது. இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார்.
90 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வெளியான படங்களில் பெரும்பாலும் ஹீரோவாக நடித்து ரசிகைகளில் உள்ளதை கொள்ளை கொண்டவர்தான் அர்ஜுன். அதற்குப் பிறகு வில்லனாக மிரட்டி பல படங்களில் நடித்திருந்தார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.
இதை தொடர்ந்து தற்போது அஜித் - அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அர்ஜுன் அஜித்துடன் இப்படத்தில் இணைந்துள்ளார். இதன் காரணமாகவே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து உள்ளது..

நடிகர் அர்ஜுனனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் சமீபத்தில் தான் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. உமாபதி வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக காணப்படுகிறார்.
இந்த நிலையில். தனது மருமகன் உமாபதி ராமையாவை வைத்து படமெடுக்க முடிவு செய்துள்ளார் அர்ஜுன்.. அதை தயாரிப்பது மட்டுமின்றி தானே இயக்கப் போகின்றாராம்.
அதன்படி அர்ஜுன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஏழுமலை. இந்த படம் மாபெரும் வெற்றி கண்டது தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் தனது மருமகனை ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளார் என்றும் அந்தப் படத்தை அர்ஜுன் இயக்கி தயாரிக்கப் போகின்றார் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!