• Sep 03 2026

வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா நிறுவனம்! இதோ முழுவிபரம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றிக் கண்ட திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்தது. அதற்குப் பிறகு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

இதை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது வேட்டையன், கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். வேட்டையின் திரைப்படத்தை ஞானவேல் இயக்கி வருகின்றார். இந்த படத்தில் அவருடன் அமிர்தாபச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. ஆனாலும் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமலே இருந்தது.


இந்த நிலையில், வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அக்டோபர் 10-ம் தேதி வேட்டையின் படம் ரிலீஸ் ஆகும் என தற்போது தகவலை அதிகாரவபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். தற்போது அடுத்தடுத்து சூர்யா, விஜய், ரஜினிகாந்தின் திரைப்படங்கள்  வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement