• Jan 19 2025

பாக்கியாவிடம் அமிர்தா கேட்ட கேள்வி.. கதறி துடித்த பாக்கியா! கோபிக்கு செருப்படி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி வீட்டுக்கு போகுமாறு எழிலுக்கு சொல்ல, எனக்கு தெரியும் நீங்க உங்க வேலைய பாருங்க என்று சொல்லுகின்றார். அந்த நேரத்தில் பாக்கியாவுக்கு கோபி பேச, அம்மா எது செய்தாலும்  சரியா தான் இருக்கும் என்று பதிலடி கொடுக்கின்றார். அதன் பின்பு கோபி  எழிலுக்கு பணம் கொடுக்க அதையும் வாங்க மறுக்கிறார்.

மறுபக்கம் குடும்பத்தில் அனைவரும் சோகமாக இருக்க பாக்யா ஜெனி, செழியன், இனியாவுக்கு ஆறுதல் சொல்லுகின்றார். மேலும் இன்னும் இரண்டு நாட்களில் தாத்தாவின் பிறந்த நாள் வருகின்றது அதை பெருசா கொண்டாடணும் என பேச, எழில் வருவாரா என்று கேட்கின்றார்கள். அதற்கு அவன் கண்டிப்பாக வருவான் என்று பாக்கியா சொல்லுகின்றார்.


பிறகு அமிர்தாவுக்கு போன் போட்டு பேச, அவர்தான் தாங்கள் எதுவும் தப்பு செய்து விட்டோமா? ஏன் எங்களை வீட்டை விட்டு அனுப்பினீர்கள் என்று கேட்கின்றார். அதற்கு பாக்கியா உங்க மேல ஒரு தப்பும் இல்ல. ஆனா எப்பயும் ஒரு நாள் இப்படி ஒரு பிரச்சனை வரும் நீங்க தனியா இருந்தா சந்தோஷமா இருப்பீங்க என சொல்லி அழுகின்றார்.

அதன் பின்பு கோபி ராதிகா வீட்டுக்கு வந்து உன் கூட கொஞ்சம் பேசணும் என்று சொல்ல, அந்த வீட்டு விஷயம் என்றால் என்னிடம் சொல்ல வேண்டாம் என ராதிகா சொல்லுகிறார். ஆனாலும் கோபி எழில் வீட்டை விட்டு போயிட்டான் என சொல்ல, ராதிகா எழுந்து சென்று விடுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement